சுவாரஸ்யமான விஷயம்!

எனக்கு சுவாரஸ்யமாக பட்ட சில விஷயங்கள் இங்கே, உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்...

Friday, March 25, 2005

 

சுவாரஸ்யமான விஷயம்!

வலைப்பதிவு எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சிகிட்டாச்சி. இன்னிக்கு வாசகர்களை வரவழைக்க (தன்னோட "வலை"யில் விழ வைக்க?) அவங்க அவங்க ஆளுக்கொரு உத்தியைக் கையாள்றாங்க. அதில ஒண்ணு, மத்தவங்க வலைப்பதிவில பின்னூட்டம் கொடுக்குறேன் பேர்வழின்னு நைசா தன்னோட பிளாக் அட்ரஸ போட்டுட்டு ஓடியாந்துர்றது.

எனக்கு தெரிஞ்ச "சுவாரஸ்யமான" விஷயங்களைப் பதிவு செய்யலாம்னு உத்தேசம். புதுவருஷ தீர்மானம் மாதிரி "புஸ்" போவாம ஏதாச்சிம் செய்வேங்க.

கருத்துக்கள்:
இப்ப எப்படி உங்கள வரவேற்கிறது?
 
வலைய்ப்பதிவில் சுவாரஸ்யாமான விஷயமே சினிமா தான். அதைப் பத்தி எதுனாச்சும் எழுது கண்ணா! எழுது!
 
Wordsworthpoet-க்கு:
சர்தார்ங்க Blog பதியக்கூடாதா? இல்லே... Blog பதியரவங்க சர்தார்-ன்னு பேர் வெச்சிக்கக் கூடாதா?

எது எப்டியோ...புனைப் பேரு,பூனைப் பேருன்னு எதுவும் செய்யாம ஒரிஜினல் பேர்லியே பதியறேங்க!

தங்கமணி...உங்க வரவேற்புக்கு மிக்க நன்றி!

சுட்டிப் பையா...சினிமா இல்லாம ஏகப் பட்ட விஷயம் சுவாரஸ்யமா கொட்டிக்கிடக்கிது கண்ணா. கொஞ்சம் பொறுமையா இருந்தீன்னா எல்லாத்தையும் பாக்கலாம். சரீயா?
 
//அதில ஒண்ணு, மத்தவங்க வலைப்பதிவில பின்னூட்டம் கொடுக்குறேன் பேர்வழின்னு நைசா தன்னோட பிளாக் அட்ரஸ போட்டுட்டு ஓடியாந்துர்றது//

ஹி..ஹி..இப்ப நான் உங்க பதிவுக்கு இப்படித்தான் வந்தேன்,
 
Post a Comment



<< Home