சுவாரஸ்யமான விஷயம்!

எனக்கு சுவாரஸ்யமாக பட்ட சில விஷயங்கள் இங்கே, உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்...

Saturday, April 16, 2005

 

ட்ரை பண்ணி பாத்துட்டு சொல்லுங்க!

ஒவ்வொரு தடவ லீவுக்கு இந்தியா போகும் போதும், என் அண்ணனின் மகனோடு தான் என் உலகம் கழியும். 5 வயசு பொடியன் என் அன்பன் என்பதால் அவனைக் கவர என்னென்ன செய்ய வேண்டும் என்பதை ஊருக்குப் போக பிளான் செய்யும்போதே யோசிக்க ஆரம்பித்துவிடுவேன்.

கதைகள், சாகசங்கள், குட்டி குட்டி சர்க்கஸ் வேலைகள் என்று எல்லாம் செய்து காட்டித்தான் அவனை கைக்குள் வைக்க முடியும். போன வருஷம் செய்ஞ்சதையே இந்த வருசமும் செய்தால், காற்றை வாயில் அடக்கி வாயை பெருசாக்கி “ப்ப்ப்பு...” என்று ஏதோ (?) சொல்ல வந்து "மூஞ்சி... வேற ஏதாவது செய்து காட்டுங்க சித்துபா" (அட சித்தப்பாவைத் தான் சொல்றான்!) என்பான்.

ஓவ்வொரு சமயமும் அதிக நேரம் அவனோடு செலவிடுவதால், அவ்வப்போது சரக்கு கையிருப்பு குறைந்துவிடும் போது என் பாடு திண்டாட்டம் ஆகிவிடும். வயசு கூடி மெச்சூர் (?) ஆகிட்டே வர்றதால விஜய் மாதிரி ப்ளாஷ் போட்டு பிலிம் காட்ற வேலையும் அவன்கிட்டே எடுபட்றதில்லே. இந்த வயசில நாமல்லாம் என்ன செஞ்சிட்டிருந்தோம்ந்னு நினைச்சிப் பார்த்தா கொஞ்சமில்ல...ரொம்பவே வெக்கமாவும், தலசுத்தலாவும் இருக்கும்.

அங்கே இங்கே- ந்னு ஒரு வழியா சுவாரஸ்யமான விஷயங்கள சேர்த்து வச்சி, சர்க்கஸ் சரக்கு குறைஞ்சி போற சமயங்கள்ள இது போல குட்டி குட்டியா கதை மாதிரி துணுக்குங்கள எடுத்து விடுவேன்.

எந்த ஒரு பேப்பரையும் 7 தடவைக்கு மேல் சரிபாதியா மடிக்க முடியாது. (ஆறாவது மடிப்பிலேயே என்னை "மக்கு"ன்னுட்டான்)

காபியை விட ஆப்பிள் உங்களை காலையில் எழுந்திருக்க வைக்கக் கூடியது. (எழுந்திரிக்கனும்னு நெனக்கறங்களுக்கு மட்டும்)

Marlboro சிகரெட்டின் முதல் உரிமையாளர் இறந்தது நுரையீரல் புற்று நோயினால் (lung cancer) தான்.

விண்வெளியிலிருந்து 10 டன் தூசி/துகள்கள் தினமும் பூமிக்குள் கொட்டுகிறது

4 வயது குழந்தை தோராயமாக தினம் 437 கேள்விகளை கேட்கிறது. (எத நம்பறேனோ இல்லையோ இதுமட்டும் நெசங்க!)

நீலமும், வெள்ளையும் உலக அளவில் பயன்படுத்தப்படும் பள்ளி சிறார்களின் உடையின் நிறங்கள்.

ஒவ்வொரு வருடமும் சூரியன் தனது எடையில் 360 மில்லியன் டன் இழக்கிறது.

உலகத்திலேயே அதிக தவளையின் கால்களை ஏற்றுமதி செய்வது ஜப்பான் தான்.

A, B, C, D, E & F - ஐக் கொண்ட மிகச்சிறிய வார்த்தை “ FEEDBACK”

வளைகுடா கடலில் ஒரு வாசகத்தை பாட்டிலில் எழுதி ஒரு கரையில் போட்டால் மணிக்கு 4 கி.மீ வேகத்தில் பயணித்து அது மறு கரையை அடையும். (Gulf ஸ்டாம்ப் ரேட்டு ஏறிப்போச்சின்றது நெசன்னாலும் இது கொஞ்ச ஓவரா தெரியுது)

அதிகமான சினிமா தியேட்டர்களைக் கொண்ட நாடு "ரஷ்யா" (அதிகமா கண்பார்வை பறி போனவங்களும் ரஷ்யாகாரங்கதாங்கறதும் உண்மைதான்)

உலக அளவில் அதிக அளவில் விபத்துகள் நடப்பது "சனிக்கிழமை"யில் தான். (Sunday வீட்டுக்காரியோட full-time இருந்தாவனுமேன்ற பேஜார்லியா?)

நீங்கள் வானவில்லை பார்த்தீர்கள் என்றால் கண்டிப்பாக சூரியன் உங்கள் பின்னால் இருக்க வேண்டும்.

கால்குலஸ் முறையைக் கண்டுபிடித்த சர் ஐசக் நியூட்டனுக்கு அவரின் உடன்பிறந்தவர்களின் பெயரை கூட நினைவில் வைக்க முடியாத அளவுக்கு ஞாபக மறதி உண்டு. (சம்பந்தப்பட்ட வாண்டு இத உங்ககிட்டியே எப்பவாவது, குறிப்பா மார்க் ஷீட் வரும்போ திருப்பி போட்டு வாங்கும்னு பயந்தா "கட்' பண்ணிக்கோங்க)

புதிதாக பிறந்த குழந்தை தன்னுடைய எடை அளவு கழிவை ஒவ்வொரு 60 மணி நேரத்தில் வெளியேற்றும்.

1 பவுண்டு எடை அளவு சர்க்கரை உண்டாக்க, 1 டன் நீரை செலவழிக்க வேண்டும்

நீர் அருந்தாமல் ஒரு மனிதன் தோராயமாக 11 நாள் வரை உயிர் வாழ முடியும்.

நம் வயிற்றுக்குள் 35 மில்லியன் ஜீரண சுரப்பிகள் உள்ளது

பெண்ணை விட ஆண் சிறிய எழுத்துக்களை படிக்க முடியும்
ஆணை விட பெண்ணுக்கு கேட்கும் திறன் அதிகம்

1987 ம் வருடத்தில் ஒரே ஒரு ஆலிவ் பழத்தை உணவில் தவிர்த்ததன் மூலம் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு கிட்டிய லாபம் US $ 40,000/=

குதிரையில் அமர்ந்திருக்கும் ஒரு வீரனின் சிலையில், குதிரையின் முன் இரு கால்களும் அந்தரத்தில் உயர்ந்திருந்தால் அந்த வீரன் போரில் இறந்தவன் என அர்த்தம்.

முன் கால்களில் ஒன்றுமட்டும் உயர்ந்திருந்தால், அந்த வீரன் போரில் காயம்பட்டவன் என அர்த்தம்.

குதிரையின் நான்கு கால்களும் தரையில் பதிந்திருந்தால் அந்த வீரன் இயற்கையாக மரணித்தவன் என அர்த்தம்.
{சித்துபா... அந்த ராட்டினத்தில நாலுகாலையும் தூக்கி கிட்டு பறக்குதே குருத, (be patient. அவன் குதிரையைத்தான் சொல்றான்) அதுக்கு என்னா அர்த்தம் சொல்லுங்க? என்ற போது கையில் கல்லை எடுத்துக் கொண்டு சிலையை கண்டுபிடித்தவனை தேடினேன்.}

பல் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவது என்னவென்றால் டாய்லெட்டிலிருந்து, டூத் பிரஷை 6 அடி தள்ளியாவது வைக்க வேண்டும். இல்லை என்றால், ஒவ்வொரு முறை ப்ளஷ் செய்யும்போதும் நுண்ணிய நீர்த்திவலைகள் சேகரிக்கப்படும்.

ஒரு மில்லியன் அமெரிக்கர்களுக்கு 3000 பேர் வீதம் சிகரெட்டிற்கு அடிமையாகிறார்கள். இதில் 80% சிறுவர்கள்

உலகப்புகழ் பெற்ற மிக்கி மவுஸை வடிவமைத்த வால்டிஸ்னி எலியைக் கண்டால் நடுங்குவாராம்.

ஒரு பாட்டில் Coca Cola வில் உள்ள சிட்ரிக் ஆஸிட், துணிகளில் உள்ள Grease -ஐ நீக்குவது உட்பட கழிப்பறை சுத்தம் செய்யும் திரவத்தைவிட நன்றாக சுத்தம் செய்யக்கூடியது,

உலகத்தில் பெருகிவரும் மக்கள் தொகையைவிட பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாம்.

விண்வெளியில் உள்ள நட்சத்திரங்களை நொடிக்கு ஒன்று என்று எண்ணினால் முழுவதும் எண்ணி முடிக்க 3000 வருடங்கள் ஆகும்.

Naked என்றால் பாதுகாப்பற்றது
Nude என்றால் துணியற்றது (இனிமே ரண்டையும் போட்டு குழப்பிக்காதீங்கப்பா...)

இப்ப உள்ள குட்டீஸோட ஆடிப்பாடி விளையாட்டுக்காட்டி ஓய்ஞ்சி போனவங்க என்னை மாதிரி கொஞ்சம் ட்ரை பண்ணி பாத்துட்டு சொல்லுங்க.

Enna naan Sollrathu saridhaaney?