சுவாரஸ்யமான விஷயம்!

எனக்கு சுவாரஸ்யமாக பட்ட சில விஷயங்கள் இங்கே, உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்...

Wednesday, February 08, 2006

 

அதன் மேலே ஒருவித வெறி!

ணையத்தோட தொடர்புங்கறது இன்றைய மக்களின் வாழ்க்கையோட ஒன்றிணைஞ்சிப்போன ஒண்ணுன்னு எல்லாருக்கும் தெரியும். இணையம்ங்கறது நாம தெரிஞ்சுக்க விரும்புற விஷயங்களை எளிமையா, வசதியா, தனிப்பட்ட முறையில் தெரிஞ்சிக்கமுடியும்ங்கறதாலயே இதை பயன்படுத்துறவங்களோட எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கிட்டே வருது. எண்ணிக்கை மட்டுமில்லே. இணையத்தை தொடர்ந்து பயன்படுத்தறவங்க நாளுக்கு நாள் அதன் மேலே ஒருவித வெறியோட அடிமையாகிட்டு வர்றாங்கன்னு சமீபத்திய சர்வேக்கள் சொல்லுது. ஒரு தனி மனிதனின் வாழ்க்கையில எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத வரைக்கும் அது தப்பில்லே.

"இன்டர்நெட்க்கு அடிமை அப்படீன்னு நீங்க சொல்றதே தப்பு!"ங்கறவங்ககிட்டே நான் விவாதம் செய்ய விரும்பலே. ஏன்னா, அது போல விவாதங்களும் நிறைய நடந்துகிட்டுதான் இருக்கு. மனிதர்களோட வாழ்க்கையில் தொந்தரவு ஏற்படுத்துமா -ங்கற கேள்வி ஒருபுறம் இருக்க, நம்மோட அன்றாட வாழ்க்கையில இணையத்தோட தாக்கம் எந்த அளவுக்கு இருக்குன்னு தெரிஞ்சிக்கத்தான் இந்த பதிவு.

இங்கே குறிப்பிட்டு இருக்கிறதுல ஏதாச்சிம் மூணு விஷயங்களுக்கு நீங்க ஆமாஞ்சாமி போட்டீங்கன்னா, விஷயம் வெவகாரமா ஆயிட்டு வருதுன்னு அர்த்தம்.

அலுவலகத்தில்...

கோபமாகவோ அல்லது வேதனையான சமயத்திலியோ இன்டர்நெட்டில் கவனம் திருப்பினால் அது குறையும் என்று நம்புவது. இணையத்தில் உலாவுவது என்பது ஏதோ வானத்தில் உலவுவது போன்று இன்பம் தருகிறது என்று நம்புவது

விஷயங்களை விளங்கி முழுமையாக படிக்க வேண்டும் என்பதைவிட அளவுக்கு அதிகமாக தெரிந்து கொள்ளவேண்டும் என்று நினைப்பது (சுருக்கமா சொன்னா நுனிப்புல் மேயறது)

வேலையில ஆர்வம் கொறஞ்சிட்றதால காரணமில்லாமல்(?) அவ்வப்போது மேலிடத்திலிருந்து டோஸ் வாங்குவது. முடிச்ச வேலையில ஒங்களுக்கே திருப்தி இருக்காது, தரமும் இருக்காது என்பதையும் உணர்வீங்க.

படிப்பில் ஆர்வம் குறைவது (ரிஸர்ச் ஸ்டடீஸ் என்று ஆரம்பித்து தேடல்களை இணையத்தில் ஆரம்பித்து சம்பந்தமில்லாமல் நேரம் செலவழிப்பது)

கையில் புத்தகமே இருந்தாலும், அதன் ஆன்லைன் பதிப்பு கிடைக்குமா என்று அலைவது.

முடிஞ்ச வரைக்கும் ஆபிஸ்ல இன்டர்னெட் உபயோகப்படுத்திட்டு, லேட்டாத்தான் வீட்டுக்குப்போவீங்க.

செய்ற வேலையில கவனம் இருக்காது. (கையில போனும் கண்கள் இன்டர்னெட்டிலும் இருந்தால் எதிர்முனையில் பேசுபவருக்கு வெறும் உம்..!உம்..!" என்பதுதான் உங்களின் பதிலாக இருக்கும்)

உலாவும் போது சக பணியாளர் குறுக்கே வந்தால் தவிர்க்கப்பாப்பீங்க. தொடர்ந்து நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்தால் "போய்த் தொலையேண்டா" என்று மனதில் சொல்லியிருப்பீங்க.

அடிக்கடி கழுத்து வலி, இடுப்பு வலி, கையை சொடுக்கும் பழக்கம் வரும்.

குற்ற உணர்ச்சியினால் சீட்டுக்கு டேமேஜ் வரும் என்பது போன்ற அபாயத்தை அப்பப்போ உணர்ந்தாலும் இணையத்தை விட மனசிருக்காது.

தேவையில்லாமல் அடிக்கடி இ-மெயில் வந்திருக்கிறதா என்று சோதித்துப்பார்ப்பது.

நிஜமாகவே பிஸியாக இருக்கும்போது, வேலையே இல்லாதமாதிரி ரிலாக்ஸ் ஆக இணையத்தில் உலாவுவது.

அலுவலகத்தில் ஓய்வு நேரங்களில் இன்டர்னெட்டில் இருக்கும் போது ரொம்ப தெரிஞ்ச சினேகிதன் ஒருத்தன் போன் பண்ணினா நான் ஆபிஸ்ல ரொம்ப பிஸின்னு சொல்லி போனை வெச்சிட்டு மறுபடி உலாவ ஆரம்பிச்சிடுவீங்க.

ஒரு விஷயத்தை தேடுவதற்காக பிரவுஸரை திறப்பீங்க. ஒரு தளத்திலேயிருந்து இன்னொன்று அதிலேயிருந்து இன்னொன்றுக்கு என்று சம்பந்தமேயில்லாமல் தாவித்தாவி எதைத் தேட நினைத்தேன் என்பதையே மறந்திடுவீங்க.

குடும்ப வாழ்க்கையில்

வெளியில் செல்வதில் ஆர்வமிருக்காது. ஷாப்பிங், பொது நிகழ்ச்சிகளுக்கு போவது போன்றவற்றில் ஆர்வம் கொறைஞ்சிட்றது.

சாப்பிடும் நேரத்தை சுருக்கிவிடுவது, அல்லது மானிட்டர் முன் உட்கார்ந்து சாப்பிடுவது. ஒரு நாளைக்கு இன்டர்நெட் கனைக்ஷன் இல்லாட்டி பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கும்.

நீங்கள் அதிகம் இன்டர்னெட் பயன்படுத்துவதாக மனைவி, மக்கள் சொல்லும்போது எரிச்சல்படுவது / அதை முற்றிலும் மறுப்பது.

"இனிமேலுக்கு வேலையில கவனம் செலுத்தனும்"னு தீர்மானம் செய்வீங்க. ஆனா முடியாம தடுமாறுவீங்க.

"ஒரு அரைமணி நேரந்தான் ஒக்காருவேன் இன்னிக்கி" அப்படீன்னுதான் ஆரம்பிப்பீங்க.

நேரம்போனது உங்களுக்கே தெரியாமல், குடும்பத்தினர் கோவித்துக்கொண்டார்கள் என்பதை லேட்டாக உணர்ந்து மறுபடி நொந்துப்பீங்க.

உறவுகளை தவிர்ப்பீங்க (கொழந்தை அழுவுறான் பாருங்க, கொஞ்ச நேரம் பாத்துக்குங்க என்று மனைவி சொல்லிவிட்டதை கவனிக்காம கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் பாட்டு வாங்குவீங்க)

பொதுவாகவே அமைதியில்லாம இருப்பீங்க.

ஒங்களுக்கு இருக்கிற வலையோ மலையோ, ஒலகத்திலேயே அது ஒன்னுதான் ஒசத்தின்னு நெனப்பீங்க. அதனோட ஒரலை ஊர் ஒலகம் எல்லாம் கொடுப்பீங்க.

எனக்குத் தெரிஞ்சதையும், படிச்சதையும் பட்டியல் போட்டுட்டேன். இதிலேயிருந்து விடுபடறத்துக்கும் வழிகள் இல்லாம இல்லே. இதுவே நீண்டுட்டதால அதை முடிஞ்சா அடுத்த பதிவுல சொல்றேன். அதுக்கு முன்னாடி மேற்படி சூழ் நிலைகள்ல ஒங்க அனுபவம் புதுசா ஏதாச்சிம் இருந்தா மறக்காம தட்டிவுடுங்க.

கருத்துக்கள்:
அது சரி..... இந்த மாதிரி பதிவு போட்டா அதப் படிக்க அலையறதும் ஒரு வித வெறி தானா?

உம்... உம்.... உம்....

//ஒங்களுக்கு இருக்கிற வலையோ மலையோ, ஒலகத்திலேயே அது ஒன்னுதான் ஒசத்தின்னு நெனப்பீங்க. அதனோட ஒரலை ஊர் ஒலகம் எல்லாம் கொடுப்பீங்க.//

அப்போ சுவாரசியமான விஷயம் எந்த கேட்டகரி ?

Jokes apart, what you have said is quite right.. Thanks for posting this..
 
சரியாத்தான் செல்லி இருக்கிங்க சர்தார்.
 
ஏங்க இவ்ளோ சொன்னீங்க. இதிலிருந்து மீள வழியும் சொல்லி இருந்தா நல்லா இருக்கும்.

இன்னொன்று தெரியுமா? நீங்க மேற்சொன்ன காரணங்களால் தான் நான் உங்கள் வலைப்பதிவிற்கே வந்துள்ளேன்.

நன்றி.

மேலெ சொன்னவை தவிர்க்க முடியாத உண்மையும் கூட. (என்னளவில்)
 
இணையக் காத்தாடி, ஒங்க கருத்துகளுக்கு நன்றி!

சு. வி எந்த கேட்டக்ரியில சேர்த்தின்னு நீங்கதான் சொல்லணும்.
 
பின்னூட்டத்திற்கு நன்றி சந்தோஷ்!

இந்தப்பதிவுல குறிப்பிட்டிருக்குற விஷயங்கள் எல்லாமே நம்மைச்சுற்றி நடக்கிறதுதான்.
 
அனானிக்கும் நன்றி!

//ஏங்க இவ்ளோ சொன்னீங்க. இதிலிருந்து மீள வழியும் சொல்லி இருந்தா நல்லா இருக்கும்.//

ஏங்க இவ்ளோ எழுதுனீங்க. ஒங்க பேரையும் சொல்லியிருந்தால் எவ்ளோ நன்றாக இருக்கும்.

:)
 
""அலுவலகத்தில் ஓய்வு நேரங்களில் இன்டர்னெட்டில் இருக்கும் போது ரொம்ப தெரிஞ்ச சினேகிதன் ஒருத்தன் போன் பண்ணினா நான் ஆபிஸ்ல ரொம்ப பிஸின்னு சொல்லி போனை வெச்சிட்டு மறுபடி உலாவ ஆரம்பிச்சிடுவீங்க.""

:-)))
 
Dear Anonymous,

ரொம்ப அனுபவப்பட்டிருப்பீங்கன்னு நெனக்கிறேன். சினேகிதனை விடவா இணையத்தின் மேல ஒங்களுக்கு நட்பு(?) அதிகம்? திருந்துங்கய்யா!!
 
உங்க பதிவ பாத்துக்கிட்டே அடுப்புல காய்கறிய காந்த அடிச்சதுதான் எனக்கு இதுல லேட்டஸ்ட் அனுபவம்!! :-)
 
நல்ல விஷயங்களை படிப்பதும் அதற்காக அலைவதும் வெறிதானா?
 
Post a Comment



<< Home