சுவாரஸ்யமான விஷயம்!

எனக்கு சுவாரஸ்யமாக பட்ட சில விஷயங்கள் இங்கே, உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்...

Monday, August 15, 2005

 

காத்திருக்கிறது பரிசு!

சும்மானாச்சுக்கும் பின்னூட்டம் இட்டால் மட்டும் தான் பரிசா? யார் சொன்னது?




இங்கே

இடம்பெற்றுள்ள

இப்படத்திற்கு

பொருத்தமான கவிதைகளுக்கும்,

கருத்துள்ள கமெண்ட்டுக்கும்

காத்திருக்கிறது பரிசு!

கருத்துக்கள்:
விதைகளுக்கும்,

ருத்துள்ள

மெண்ட்டுக்கும்

காத்திருக்கிறது பரிசு
 
க..

க...

க..

கா...

நன்றி நல்லடியாரே!

எப்போதோ நான் அரைகுறையாக படித்த ஹிந்தி வகுப்பை ஞாபகப்படுத்தியமைக்கு!
 
ஓடு(போகு)து பார் நம்ம வண்டி
ஜப்பான் நாட்டு பேருலே!
 
நெல்லையன், சரியான தொல்லையனா இருப்பீங்க போலிருக்கே!

அவதாரம்... ஒங்க நக்கலை ரொம்பவே ரசித்தேன்!
 
கலக்கறீங்களே அபூமுஹை!

நான் சொல்ல வந்தது உங்கள் கவிதையை, தமிழ்மணத்தில் சில பேர் வயிற்றில் நீங்கள் கலக்கும் புளியை அல்ல!
 
தாங்க்ஸ் அ! ஆ! ஆ...!
(அட நீங்கதாங்க அபூ ஆதில் ஆசாத்)

பழமையும் புதுமையும் கலந்த ஒங்க கவிதையில் இளமையும் இனிமையும் இருக்கு!

தங்கள் வரவுக்கு நன்றி!
 
அரிதான சலனங்களுடன்
ஆங்காங்கே அமர்ந்திருக்கும்
மனிதர்கள்

மேகத்தின் மயிர்கற்றை போல்
மெல்லியதாயெழும்
புகைக்கோடு

வாய்மூடியிருக்கும் கைகளையும்
ஆடை நுனிகளையுமூடுருவி
அரைக்குரலில் பரிமாறும்
ஆதங்கங்கள்

கொதித்து வழியும் பாத்திரமாய்
சிவந்து தளும்புகின்ற கண்கள்
வெடித்திடத் துடிக்குமென் நெஞ்சம்
மனதுக்குள்ளே ஊழித்
தாண்டவமாடும் உன்னத
தருணங்கள்

கேட்டதையும் பார்ப்பதையும்
நம்ப மறுத்து
பிம்பங்களில் கரைந்துபோகத்
துடிக்குமெந்தன் உள்ளம்

காலத்தைப் பின்தள்ளி
அவனை எழுப்பிட
முடியாதாவென
ஏங்குமென் இதயம்

தரையில் அசைவின்றிக்
கண்மூடியவன் படுத்திருக்க
சுற்றிலும் புரியாத
அரவங்கள்

காற்றிலிருந்து உதித்ததைப்
போலவே அதில் திரும்பக்
கலந்துபோகக் காத்திருக்கிறான்
என்னவன்

தூரத்தில் இருந்து நோக்கி
மகிழ்வுடன் தலையாட்டிக்
கொண்டிருக்கையில்
சட்டெனப் பறந்தோடியது
நூலறுந்த பட்டம்

ஆர்வத்துடன் அனைவரும்
விளையாடிக் கொண்டிருந்த
ஆட்டத்தை
முட்புதரில் தொலைந்து போய்
முடித்து வைத்தது
அதுவரை துள்ளிய பந்து

இயக்கங்கள் நின்ற
அத்தருணங்கள் இதுவரை
என்னில்
ஏமாற்றத்தைத் தான்
தந்திருக்கின்றன - ஆனால்
இவனியக்கம் நின்ற
நொடியிலிருந்து என்
இயக்கத்தை வெறுத்து
நின்றுபோகத் துடிக்கிறேன்

மனவுலகிலிருந்து என்னை
புறவுலகிற்கு இழுக்கின்றன
காலம் புண்ணாற்றுமெனும்
ஆறுதல் வார்த்தைகள்

நானிருக்கிறேன் என்றவன்
பேசாது கிடக்க
நாங்களிருக்கிறோம் எனச்
சுற்றிப் பரவும் வாக்குறுதிகள்

வெவ்வெறு திசைகளிலிருந்து
பயணத்தைத் தொடங்கிய
நாங்கள்
கைகோர்த்த புள்ளி
பார்வையிலிருந்து மறையுமுன்
சேர்ந்து வரையத் தொடங்கிய
கோலம் முற்றுப்பெறவில்லை
தன் கையை விலக்கிக்கொண்டு
நின்றுவிட்டான்

தாயான ஆயாசம் நீங்குமுன்னே
குழந்தைக்குத் தந்தையாகவும்
இருக்கவேண்டிய நிர்ப்பந்தம்

நாளைய கேள்விகளும்
நிச்சயமற்ற எதிர்காலமும்
நடுக்கத்தைத் தருகின்றன

அழியாத நினைவுகளையும்
அன்பான நிகழ்வுகளையும்
ஆரத்தழுவித் தந்த
அன்பினையும்
அதில் பூத்த இப்பூக்குட்டி
மழலையையும்
நினைத்துக்கொண்டு

பழுதாகி நின்ற என்னுயிரை
விட்டுவிட்டு
செல்லுமிடும் தெரியாமல்
ஓடிக்கொண்டிருக்கும்
வாழ்க்கை ஊர்திக்குள்
அமர்ந்து தொடருகிறேன்

சலனமற்ற இப்பயணத்தை.
 
நன்றி அனானிமஸ்!

இதை ஒங்க கவிதைன்னு ஒத்துக்க முடியாது! ஏன்னா யூனிகோடு ஸிஸ்டம் வந்ததுக்கப்பறம் வார்த்தைகளை இணையத்தில தேடிக்கண்டு பிடிக்கிறது ரொம்ப ஈஸியாயிடிச்சி! (Just Control C + Control V to any search engine)

http://www.google.com/url?sa=U&start=1&q=http://www.maraththadi.com/article.asp%3Fid%3D2591&e=912

மரத்தடி சுந்தருக்கு பரிசு கொடுக்க முடியாதுன்னாலும், தேடிக்கண்டு பிடிச்சி கொண்டு வந்து உரிய இடத்தில் ஒட்டுன ஒங்களுக்கு ஒரு ஷொட்டு!
 
அறிவியல் வாகனங்கள்
ஆயிரம் வாய்த்தாலும்
எங்களை இழுத்துச்செல்ல
எங்களுக்கேஉரிய
சண்டிமாடுகள் (அரசியல் வாதிங்க)
ஏராளம் உண்டுங்க!
ஏன்னா, நாங்கள் இந்தியர்கள்
அதாவது 'சுதேசிகள்'.

மதவெறி நோக்கியொரு
மாடு இழுக்கும்

தீவிரவாதம் தேடி ஒன்று
துணைக்குப் போகும்

சவப்பெட்டிகளிலும்
ஊழலையே மேய்வதில்
பயணமும் மறந்துப் போகும்

அதனாலென்ன..,
அன்னிய எந்ஜின்களை
ஏற்க மாட்டோம்
என்னிலையிலும்
எந்த ஹார்ஸ் பவரிலும்.
 
Post a Comment



<< Home