சுவாரஸ்யமான விஷயம்!

எனக்கு சுவாரஸ்யமாக பட்ட சில விஷயங்கள் இங்கே, உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்...

Friday, July 29, 2005

 

ஒனக்கு எங்கே போச்சு அறிவு?

தமிழ்மணத்திலே மட்டும் இல்லே...அனாமத்து, அட்ரஸு இல்லாத ஆளுங்களுக்கு எங்கவும், எப்பவுமே குறைச்சல் இருந்ததேயில்ல... காலேஜு படிக்கும்போது, ஊரு பேரு தெரியாத ஆளு கிட்டே இருந்து ஒரு போஸ்ட் கார்டு வரும்(என் அட்ரஸு எப்படிபா கெட்சுது? ந்னு மண்டைகாஞ்சி போகும்போது, ஏனோ கடைசியா எந்த நண்பன்கிட்டே முறைச்சிகிட்டேன்னு யோசிப்பேன்.)

அதுல, கடவுளோட அருளைப்பத்தி பத்தி-பத்தியா எழுதிட்டு, மறுபக்கத்தில இந்த போஸ்ட் கார்டை 99 காப்பி(பேட்டா ஷூ வெலை ரேஞ்சுக்கு?)எடுத்து ஒனக்கு வேண்டியவனுக்கு (இல்லாங்காட்டி வேண்டாதவனுக்கு?) அனுப்போனும். இத செஞ்ச ஏழை குமாஸ்தா ஒருத்தரு மேனேஜரு ஆனாரு...இதே மாதிரி நகலெடுத்த வேலையில்லாப் பட்டதாரிக்கு அமெரிக்காவில ராக்கெட் உடற வேலை கெடச்சிது. இத உதாசீனம் செஞ்ச ஸ்கூல் பையன் ஒருத்தன் அந்த வருஷம் ஸ்கூல்-லேயே லாஸ்ட் ரேங்க் எடுத்து பெயில் ஆகிட்டான். சிரிச்சிட்டு அலட்சியம் செஞ்ச தொழிலதிபர் ஒருத்தரு ஸ்கூட்டர்-ல அடிபட்டு மண்டைய போட்டார்" அப்படி இப்படின்னு எப்பேர்பட்டவங்களும் வெலவெலக்கறமாதிரி வர்ணிச்சிருக்கும்.

வர்ணணையோட தீவிரத்த பாத்து பயந்து எங்க வீட்ல "எதுக்கு வம்பு? நீயும் அனுப்பிச்சி தொலச்சிருடா" ம்பாங்க. (தெனாவட்டா அனுப்பாம நானும் அலட்சியம் பண்ணிட்டு அந்த வாரம் பூரா பைக்கைத் தொடலே-ங்கறது வேற விஷயம்.)

காலத்துக்கு ஏத்த மாதிரி இந்த டகால்த்து பார்ட்டிங்க டெக்னாலஜிய மாத்திகிட்டு வர்றாங்கன்றத்துக்கு சமீபத்தில படங்களை அட்டாச் செய்து வர்ற மெயில்ங்க சாட்சி. கடவுள் பேரு இல்லன்னா ஏதாவது உருவம் எழுதியிருக்கிற மாதிரியான மரங்கள், காய்கறிகள், மீன் வயத்தில, முட்டை ஓட்டிலன்னு இன்ன பிற இயற்கை காட்சிகளை அனுப்பி பயபக்தியோட வசனங்கள அனுப்பியிருப்பாங்க. பாத்தீங்களா கடவுளோட அற்புதத்தை?? அப்படீன்னு அதில ஒரு உருக்கம் வேற...

கீழே உள்ள போட்டோங்கள பாக்கும்போது, இந்தமாதிரி உட்டாலங்கடி கிரிகிரி காட்டிவந்த காலமெல்லாம் மலைஏறிப்போச்சின்னு தான் தோணுது.


டூப்ளிகேட் மேல / ஒரிஜினல் கீழே





அது மட்டுமா? கீழே இருக்கிற இந்த ஒரிஜினல் போட்டோ ஒன்னைக் கையில் கொடுத்து டகால்த்து பார்ட்டிகளை வரிசையா கூப்பிட்டு இத வச்சிகிட்டு ஒங்களால முடிஞ்ச தெறமய காட்டுங்கன்னு சொல்லியிருக்காங்க worth1000.com காரங்க!


மேலே இருக்கிற இந்த போட்டோவ வெச்சிகிட்டு, இந்த போட்டியில(?) கலந்துகிட்ட ஒருத்தர் பண்ண கைங்கரியம் கீழே!



இதெல்லாம் பாக்கும்போது, "ஏமாறுகிறவன் இருக்கிறவரையில, ஏமாத்தறவன் ஏமாத்திகிட்டேதான் இருப்பான்... ஒனக்கு எங்கே போச்சு அறிவு?"ன்னு எங்க வூட்டாண்ட ஒரு "பெருசு" சொல்லிகினே இருக்கும்-ன்னு ஒருத்தரை நக்கல் அடிச்சிக்கிட்டிருந்த நான், அஃறிணையிலிருந்து ஒரு படி மேல வந்து, சொன்ன அந்தப் "பெரியவரோட" வார்த்தைகளின் யதார்த்ததை வாழ்க்கையில கொண்டு வரணும்னு இப்போ நினைச்சிப் பார்க்கிறேன்.
_____________________________________________________

கொசுறு: போட்டியில கலந்துகிட்ட மத்தவங்கல்லாம் என்ன பண்ணாங்கன்ற ஆர்வக்கோளாறு உள்ளவங்களுக்கு மட்டும் போனஸா ஒண்ணு ரெண்டு கீழே...(படத்த க்ளிக்கி பெரிசு பண்ணிப்பாத்துகோங்க. இன்னும் ஆர்வம் இருந்துச்சின்னா, இங்கே போயி பாத்துக்குங்க)









கருத்துக்கள்:
"Sorry! This blog is not yet listed in thamizmanam.com", but it shows up in the listing...Strange!

Interesting Post.
 
நக்கீரனுக்கு நல்வரவு
 
இதைத்தான் ஈரைப் பேணாக்கி, பேணைப் பெருச்சாளியாக்குவது என்பார்களோ?
 
இந்த வலைப்பதிவில் பின்னூட்டமிட்டலோ / பரிந்துரை செய்தாலோ நல்லது நடக்கும்னு சிலர் சொன்னாங்க. அதனால ஸ்டாரை க்ளிக் பண்ணியாச்சு.
 
ஒரு ஆர்வக்கோளாறுல மேலே உள்ள பின்னூட்டத்தை இட்டேன். ஆனா ஸ்டாரை க்ளிக் பண்ண முடிய்ல...மன்னிச்சுக்கோங்க..
 
பின்னூட்டமிட்ட அபு முஹை மற்றும் ரமேஷ் க்கு நன்றி!
 
மேலுள்ள Star Rating ஏனோ தமிழ்மணத்தில் வேலை செய்யவில்லை.

தெரிந்தவர்கள் யாரும் பதில் அளிக்கவும்.
 
டெம்ப்ளேட்ட மாத்து அதான் ஒரே வழி!
 
எனக்கு போட்டோக்கள் தெரியவில்லை. என்ன ப்ராப்ளம்?

/இந்த வலைப்பதிவில் பின்னூட்டமிட்டலோ / பரிந்துரை செய்தாலோ நல்லது நடக்கும்னு சிலர் சொன்னாங்க. அதனால ஸ்டாரை க்ளிக் பண்ணியாச்சு. //

அப்படீன்னா நானும் கிளிக் பண்ணிடுறேன்
 
ஐயா சர்தாரு,

டெம்ப்ளேட்டை மாத்திட்டீரு, நெருப்பு நரியில ஒண்ணும் ஒழுங்கா தெரிய மாட்டேங்குதே.. அதையும் கொஞ்சம் கவனிங்கோ
 
சர்தார்ஜீ! (ஒரு மரியாதை தான்.. தப்பா எடுத்துக்காதீங்க) :))))

என் வேண்டுகோளை ஏற்று நெருப்பு நரியிலும் படிக்க உதவி செய்தமைக்கு நன்றி..
 
ஆனாலும் உமக்கு இவ்வளவு தமிழ்பற்று இருக்கப்படாது ஓய்!

நெருப்பு நரி-ங்கறது, FireFox ங்கறதுக்குத்தான்-ன்னு புரிஞ்சிக்கிறதுக்குள்ளே என் டாப்பு எகிறிடுத்து!
 
அதிரைக்காரரே...போட்டோக்கள் இப்பவாச்சிம் தெரியுதுங்களா? (அய்யகோ... சாதாரணமாவே என் பதிவ போட்டோ போட்டுத்தான் ஒப்பேத்துவேன். அதுவே தெரியலன்னா...கத கந்தல்!)
 
தெம்பூட்டிய நெல்லையருக்கு நன்றி! (கவனிக்கவும்... "னு"க்கு பதில் "ரு")

;-)
 
இந்த வலைப்பதிவில் பின்னூட்டமிட்டலோ / பரிந்துரை செய்தாலோ நல்லது நடக்கும்னு சிலர் சொன்னாங்க.

அதனால ஸ்டாரை க்ளிக் பண்ணியாச்சு.
 
வாங்க அனாமதேய அண்ணாச்சி, இந்த பதிவே ஒங்களுக்காகத்தானே!

ஸ்டாரை கிளிக் பண்ணீங்க சரி! கூட்டல்லியா? கழித்தலிலா?
 
நல்லா இருக்கு
 
Post a Comment



<< Home