சுவாரஸ்யமான விஷயம்!

எனக்கு சுவாரஸ்யமாக பட்ட சில விஷயங்கள் இங்கே, உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்...

Friday, March 31, 2006

 

ஜிமெயில் Spam Control !

ரெண்டரை ஜிபி ஆசையில, இருக்குற ஒண்ணு ரெண்டு மெயில் ஐடிகளை மூடு விழா பண்ணிட்டு ஆசை ஆசையா ஜிமெயில் தொறந்திருந்தேன். என்னதான் ஆசைக்கு ஒண்ணு, அலுவல் பணிகளுக்கு ஒண்ணுன்னு வெச்சிருந்தாலும் தவிர்க்க முடியாத காரணங்களினால என் மெயில் ஐடிய எங்கனாச்சிம் பதிவு செய்யும்போது கொடுக்கத்தான் வேண்டியிருக்கு. அப்டி கொடுக்கறதால வர்ற வினை கொஞ்ச நஞ்சமில்லீங்க. வயாக்ரா வாங்க, வாங்க! ரேஞ்சில வற்புறுத்துற மெயில்களோட தொந்தரவு தாங்க முடியல.

ஹாட்மெயில், யாஹூ மாதிரி Block Sender வசதி இல்லாததால, என் ஜிமெயில எப்ப தொறந்தாலும், அதில இருக்கற Spam Folder நிறைமாச கர்ப்பிணிபோலவே இருக்கும். இதில வவுத்தெறிச்ச என்னன்னா, தேவையில்லாத அந்த மெயில்கள் அடிக்கடி ஒரே நிறுவனத்திலிருந்து வெவ்வெற பேர்ல வந்துகிட்டே இருக்கும். Spam Folder ல தானே கெடக்கு, சரி தொலைஞ்சி போவட்டும் சனியன்னு கூட விட முடியல. ஒரு தடவை பழைய நண்பன் ஒருத்தனோட மெயில அதுல போயி ஒக்காந்துட்டதால, தெரிஞ்ச ஆளு அனுப்ச்ச மெயிலு எதுனாச்சிம் அதில போயிருந்தாக்கா? அப்டின்னு ஒரு குறுகுறுப்புல அடிக்கடி Spam Folder க்கு போயி பாக்கத்தான் வேண்டியிருக்கு.

சரிப்பூ... இருக்கவே இருக்கு Filter. அத்த யூஸ் பண்ணவேண்டியது தானேன்னு சுளுவா ஐடியா சொல்றவங்களையும் ஒரு மார்க்கமா ஏற இறங்கத்தான் பாக்கவேண்டி இருக்கு. ஏன்னா இதுக்காக ஒரு நாளக்கி ஒருமணி நேரம் நான் மெனக்கெட்டு ஒக்காந்தாத்தான் முடியும். அத்தனை குப்பை! (ஆவற காரியமில்ல அது)

Gmail Spam Control பத்தி யாருக்காச்சிம் உருப்படியான யோசனை தெரிஞ்சி இருந்தா ரெண்டு வரி எழுதிப் போடுங்க.

Control பண்ண முடியுதோ இல்லியோ, அட்லீஸ்ட் எங்கனாச்சிம் ரெஜிஸ்டர் செய்றத்துக்குன்னு கொடுக்கற/கொடுக்கப்போற ஒங்க மெயில் ஐடிய ஊர் ஒலகம் பூரா ஒங்க அனுமதியில்லாம வித்து காசாக்கறவன் யாருன்னு தெரிஞ்சுக்கனும்னா இத டிரை பண்ணி பாருங்க:

புதுசா எங்கனாச்சிம் ரெஜிஸ்ட்ரேஷன்ல ஒங்க மெயில் ஐடி கொடுக்கறீங்களா? (உதாரணத்துக்கு Dinamalar.com) அப்படி என்றால் ஒங்க ஐடியோட அதில ஒரு பிளஸ் போட்டு அந்த நிறுவனத்தோட பேரையும் சேர்த்துடுங்க. (மறுபடி உதாரணத்திற்கு மட்டும்: yourID+dinamalar@gmail.com) இதன் மூலம் பிற்காலத்தில ஒங்களுக்கு Spam மழை கொட்டோ கொட்டென்று கொட்டும்போது, எட்டப்பன் யாருன்னு நீங்க தெரிந்து "கொள்ள"லாம். ஆனா கொல்ல முடியாதுங்கறது வேற விஷயம்.