Friday, March 31, 2006
ஜிமெயில் Spam Control !
ஹாட்மெயில், யாஹூ மாதிரி Block Sender வசதி இல்லாததால, என் ஜிமெயில எப்ப தொறந்தாலும், அதில இருக்கற Spam Folder நிறைமாச கர்ப்பிணிபோலவே இருக்கும். இதில வவுத்தெறிச்ச என்னன்னா, தேவையில்லாத அந்த மெயில்கள் அடிக்கடி ஒரே நிறுவனத்திலிருந்து வெவ்வெற பேர்ல வந்துகிட்டே இருக்கும். Spam Folder ல தானே கெடக்கு, சரி தொலைஞ்சி போவட்டும் சனியன்னு கூட விட முடியல. ஒரு தடவை பழைய நண்பன் ஒருத்தனோட மெயில அதுல போயி ஒக்காந்துட்டதால, தெரிஞ்ச ஆளு அனுப்ச்ச மெயிலு எதுனாச்சிம் அதில போயிருந்தாக்கா? அப்டின்னு ஒரு குறுகுறுப்புல அடிக்கடி Spam Folder க்கு போயி பாக்கத்தான் வேண்டியிருக்கு.
சரிப்பூ... இருக்கவே இருக்கு Filter. அத்த யூஸ் பண்ணவேண்டியது தானேன்னு சுளுவா ஐடியா சொல்றவங்களையும் ஒரு மார்க்கமா ஏற இறங்கத்தான் பாக்கவேண்டி இருக்கு. ஏன்னா இதுக்காக ஒரு நாளக்கி ஒருமணி நேரம் நான் மெனக்கெட்டு ஒக்காந்தாத்தான் முடியும். அத்தனை குப்பை! (ஆவற காரியமில்ல அது)
Gmail Spam Control பத்தி யாருக்காச்சிம் உருப்படியான யோசனை தெரிஞ்சி இருந்தா ரெண்டு வரி எழுதிப் போடுங்க.
Control பண்ண முடியுதோ இல்லியோ, அட்லீஸ்ட் எங்கனாச்சிம் ரெஜிஸ்டர் செய்றத்துக்குன்னு கொடுக்கற/கொடுக்கப்போற ஒங்க மெயில் ஐடிய ஊர் ஒலகம் பூரா ஒங்க அனுமதியில்லாம வித்து காசாக்கறவன் யாருன்னு தெரிஞ்சுக்கனும்னா இத டிரை பண்ணி பாருங்க:

புதுசா எங்கனாச்சிம் ரெஜிஸ்ட்ரேஷன்ல ஒங்க மெயில் ஐடி கொடுக்கறீங்களா? (உதாரணத்துக்கு Dinamalar.com) அப்படி என்றால் ஒங்க ஐடியோட அதில ஒரு பிளஸ் போட்டு அந்த நிறுவனத்தோட பேரையும் சேர்த்துடுங்க. (மறுபடி உதாரணத்திற்கு மட்டும்: yourID+dinamalar@gmail.com) இதன் மூலம் பிற்காலத்தில ஒங்களுக்கு Spam மழை கொட்டோ கொட்டென்று கொட்டும்போது, எட்டப்பன் யாருன்னு நீங்க தெரிந்து "கொள்ள"லாம். ஆனா கொல்ல முடியாதுங்கறது வேற விஷயம்.
செல்வகுமார்
நீங்க சொல்லுறதெல்லாம் சரிதான். ஆனா, எல்லா website-யையும் குறை சொல்ல முடியாது. ஏன்னா, spam mail அனுப்புறவங்க இப்போ புதுப் புது technology-ல mail id-ய கண்டு புடிக்கறாங்க.
ஆனாலும், நீங்க சொன்ன டெக்னிக்க ஃபாலோ பண்ண வேண்டியது தான்.
நீங்க சொல்லுறதெல்லாம் சரிதான். ஆனா, எல்லா website-யையும் குறை சொல்ல முடியாது. ஏன்னா, spam mail அனுப்புறவங்க இப்போ புதுப் புது technology-ல mail id-ய கண்டு புடிக்கறாங்க.
ஆனாலும், நீங்க சொன்ன டெக்னிக்க ஃபாலோ பண்ண வேண்டியது தான்.
ஆமா! ஜிமெயிலுக்கு மட்டும் தான் நீங்க புதுசா இல்லே blogger க்குமா? இது வரை இல்லேன்னா, இப்போதைக்கு வில்லங்கம் ஏதுமில்லாத பிளாக்கர்ல ஒடனடியா ஒரு கணக்கைத் தொறந்திடுங்க!
சர்தார், இதே காரணங்களைத்தான் எனது நண்பர்களும் கூறினர். மேலும் ஜிமெயில் pop access ஐ இலவசமாக வழங்குவதாகவும் கேள்விப்பட்டேன். யாகூவில் இது கட்டணசேவை. ஆயினும் சிறுவயதில் இருந்து யாகூ என் காதலி. அவளை விடமுடியவில்லை. மற்ற கவர்ச்சி சேவைகள் ஜிமெயிலில் இருப்பினும் நான் அனுப்புவதோ முக்கியமான அஞ்சல்கள். அவற்றில் ஏதேனும் ஒன்று SPAM கனவான்களால் கண்டுபிடிக்கப்பட்டு தாக்கப்பட்டால், நான் அவ்வளவுதான். உங்களை விட மிக நீள கட்டுரை எழுத வேண்டிவரும். யாகூவிடம் உள்ள காதலை தொடரலாம் என்று நினைக்கிறேன். தங்களது தகவலுக்கு நன்றி.
//ஆமா! ஜிமெயிலுக்கு மட்டும் தான் நீங்க புதுசா இல்லே blogger க்குமா? இது வரை இல்லேன்னா, இப்போதைக்கு வில்லங்கம் ஏதுமில்லாத பிளாக்கர்ல ஒடனடியா ஒரு கணக்கைத் தொறந்திடுங்க! //
உணமைதான் சர்தார்.. புதிதே! எனக்கும் ஒரு blog இருக்கு. அதை புதுப்பிக்க நேரம் இல்லை. ஆயினும், விரைவில் முழுக்க முழுக்க தமிழில் ஒன்று தொடங்குவேன்.
எல்லாரையும் குறை சொல்ல முடியாது நீங்க சொல்றதும் வாஸ்தவம்தான். ஆனா நம்பகரமானது என்று நம்பக்கூடிய இணையங்களும் கூட இது போன்ற காரியத்தைச் செய்கிறது என்பதும் உண்மை.
டிஜிட்டல் வடிவத்திலேயே இ-மெயில் முகவரிகள் கை மாறுவதால, இந்த ப்ளஸ் எட்டப்பன் மேட்டர் ஒர்க் அவுட் ஆக வாய்ப்புகள் அதிகம்.
What u said is true. Though I hate their spam filters, Yet I love gmail and their archiving systems that allows me to easily search through..
second, It’s quick, and you dont need to refresh your page. Ever.
<< Home