சுவாரஸ்யமான விஷயம்!

எனக்கு சுவாரஸ்யமாக பட்ட சில விஷயங்கள் இங்கே, உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்...

Friday, July 29, 2005

 

ஒனக்கு எங்கே போச்சு அறிவு?

தமிழ்மணத்திலே மட்டும் இல்லே...அனாமத்து, அட்ரஸு இல்லாத ஆளுங்களுக்கு எங்கவும், எப்பவுமே குறைச்சல் இருந்ததேயில்ல... காலேஜு படிக்கும்போது, ஊரு பேரு தெரியாத ஆளு கிட்டே இருந்து ஒரு போஸ்ட் கார்டு வரும்(என் அட்ரஸு எப்படிபா கெட்சுது? ந்னு மண்டைகாஞ்சி போகும்போது, ஏனோ கடைசியா எந்த நண்பன்கிட்டே முறைச்சிகிட்டேன்னு யோசிப்பேன்.)

அதுல, கடவுளோட அருளைப்பத்தி பத்தி-பத்தியா எழுதிட்டு, மறுபக்கத்தில இந்த போஸ்ட் கார்டை 99 காப்பி(பேட்டா ஷூ வெலை ரேஞ்சுக்கு?)எடுத்து ஒனக்கு வேண்டியவனுக்கு (இல்லாங்காட்டி வேண்டாதவனுக்கு?) அனுப்போனும். இத செஞ்ச ஏழை குமாஸ்தா ஒருத்தரு மேனேஜரு ஆனாரு...இதே மாதிரி நகலெடுத்த வேலையில்லாப் பட்டதாரிக்கு அமெரிக்காவில ராக்கெட் உடற வேலை கெடச்சிது. இத உதாசீனம் செஞ்ச ஸ்கூல் பையன் ஒருத்தன் அந்த வருஷம் ஸ்கூல்-லேயே லாஸ்ட் ரேங்க் எடுத்து பெயில் ஆகிட்டான். சிரிச்சிட்டு அலட்சியம் செஞ்ச தொழிலதிபர் ஒருத்தரு ஸ்கூட்டர்-ல அடிபட்டு மண்டைய போட்டார்" அப்படி இப்படின்னு எப்பேர்பட்டவங்களும் வெலவெலக்கறமாதிரி வர்ணிச்சிருக்கும்.

வர்ணணையோட தீவிரத்த பாத்து பயந்து எங்க வீட்ல "எதுக்கு வம்பு? நீயும் அனுப்பிச்சி தொலச்சிருடா" ம்பாங்க. (தெனாவட்டா அனுப்பாம நானும் அலட்சியம் பண்ணிட்டு அந்த வாரம் பூரா பைக்கைத் தொடலே-ங்கறது வேற விஷயம்.)

காலத்துக்கு ஏத்த மாதிரி இந்த டகால்த்து பார்ட்டிங்க டெக்னாலஜிய மாத்திகிட்டு வர்றாங்கன்றத்துக்கு சமீபத்தில படங்களை அட்டாச் செய்து வர்ற மெயில்ங்க சாட்சி. கடவுள் பேரு இல்லன்னா ஏதாவது உருவம் எழுதியிருக்கிற மாதிரியான மரங்கள், காய்கறிகள், மீன் வயத்தில, முட்டை ஓட்டிலன்னு இன்ன பிற இயற்கை காட்சிகளை அனுப்பி பயபக்தியோட வசனங்கள அனுப்பியிருப்பாங்க. பாத்தீங்களா கடவுளோட அற்புதத்தை?? அப்படீன்னு அதில ஒரு உருக்கம் வேற...

கீழே உள்ள போட்டோங்கள பாக்கும்போது, இந்தமாதிரி உட்டாலங்கடி கிரிகிரி காட்டிவந்த காலமெல்லாம் மலைஏறிப்போச்சின்னு தான் தோணுது.


டூப்ளிகேட் மேல / ஒரிஜினல் கீழே





அது மட்டுமா? கீழே இருக்கிற இந்த ஒரிஜினல் போட்டோ ஒன்னைக் கையில் கொடுத்து டகால்த்து பார்ட்டிகளை வரிசையா கூப்பிட்டு இத வச்சிகிட்டு ஒங்களால முடிஞ்ச தெறமய காட்டுங்கன்னு சொல்லியிருக்காங்க worth1000.com காரங்க!


மேலே இருக்கிற இந்த போட்டோவ வெச்சிகிட்டு, இந்த போட்டியில(?) கலந்துகிட்ட ஒருத்தர் பண்ண கைங்கரியம் கீழே!



இதெல்லாம் பாக்கும்போது, "ஏமாறுகிறவன் இருக்கிறவரையில, ஏமாத்தறவன் ஏமாத்திகிட்டேதான் இருப்பான்... ஒனக்கு எங்கே போச்சு அறிவு?"ன்னு எங்க வூட்டாண்ட ஒரு "பெருசு" சொல்லிகினே இருக்கும்-ன்னு ஒருத்தரை நக்கல் அடிச்சிக்கிட்டிருந்த நான், அஃறிணையிலிருந்து ஒரு படி மேல வந்து, சொன்ன அந்தப் "பெரியவரோட" வார்த்தைகளின் யதார்த்ததை வாழ்க்கையில கொண்டு வரணும்னு இப்போ நினைச்சிப் பார்க்கிறேன்.
_____________________________________________________

கொசுறு: போட்டியில கலந்துகிட்ட மத்தவங்கல்லாம் என்ன பண்ணாங்கன்ற ஆர்வக்கோளாறு உள்ளவங்களுக்கு மட்டும் போனஸா ஒண்ணு ரெண்டு கீழே...(படத்த க்ளிக்கி பெரிசு பண்ணிப்பாத்துகோங்க. இன்னும் ஆர்வம் இருந்துச்சின்னா, இங்கே போயி பாத்துக்குங்க)









Tuesday, July 19, 2005

 

கொளறுபடி எங்கே?

இது சுவாரஸ்யமான விஷயம் இல்லீங்க...கொஞ்ச யோசிக்க வேண்டிய விஷயம்.

அபூ உமர் எழுதியிருந்த புருனை சுல்தான் பத்தின ஒரு பதிவ நேத்து படிச்சேன். ஒடனே என் கைல இருக்குற சில போட்டோங்களோட ஞாபகம் வந்திச்சி. சரி...அதுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம்ன்னு நீங்க கேக்கலாம்.

1994 ஆம் வருஷம் சூடான் நாட்டுல உணவுத்தட்டுப்பாடு வந்தப்போ, அந்த சம்பவங்கள பதிவு செய்ய வந்த Kevin carter ங்கற போட்டோகிராபர் இந்த போட்டோ எடுத்து முடிச்சிட்டு, அவர் வேலைய பாக்கப் போயிட்டார். அப்புறம் சாவகாசமா அந்த கொழந்தயோட நிலைமை என்னாச்சின்னு யோசிச்சி பாத்து அந்த மன உளைச்சல்ல தற்கொலை பண்ணிகிட்டார்ன்னு கூட சொல்றாங்க.




ஒலகத்தையே ஒரு உலுக்கு உலுக்கின இந்த போட்டோவுக்கு Pulitzer Prize அப்படீங்கற அவார்டு கொடுத்தாங்கன்னும் சொல்லிக்கறாங்க.

நிற்கக்கூட தெம்பில்லாத, பட்டினியின் உச்சத்தில இருக்குற இந்த குழந்தையைக் குறி வெச்சு காத்திருக்கிற பிணந்தின்னிக் கழுகு, காணக்கிடைச்ச ஒட்டகங்களோட கழிவுகள உணவுக்காகவும், குளிக்கவும் பயன்படுத்தற இயலாமைகள் இதெல்லாம் மனசை கூறு போட்டு ரணமாக்குற காட்சிகள்.




எங்களுக்கு குடிக்கறத்துக்கே நாதியில்ல...இதுல குளிக்கறத்துக்கு தண்ணிய எதிர்பாக்க முடியுமா?



நாங்க பட்டினியினால உசிர விடறத்துக்கு, இது மேல்!



ஆஹா...ரொட்டித்துண்டு! இன்னிக்கு பொழுது நான் வாழறது உறுதியாய்டிச்சு



தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் ந்னு பாடிய பாரதி அந்த தனி மனிதனுக்கு உணவு கிடைக்காமல் இருப்பதை தடுக்கறத்துக்கு என்ன செய்றதுன்னு சொல்லாம போயிட்டாரு.

அமெரிக்காவிலேயும், ஐரோப்பாவிலேயும் உணவு தானியங்கள் அளவுக்கு அதிகமா விளைஞ்ச காரணத்தினாலயும் அதனால மார்க்கெட் ரேட்டு சரியக்கூடாதுங்கறதால அத்தனையும் கொண்டு போயி கடல்ல கொட்றாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்

ஒருபக்கம் கடல்ல கொட்ற இந்த மாதிரி செல்வ செழிப்பையும் மற்ற பக்கம் பசி பட்டினின்னு இதுமாதிரி வறுமையும் பாக்கும்போது, கொளறுபடி உணவு உற்பத்தியில இல்ல… வினியோகிக்கிறதுல தான்னு நான் நெனக்றேன்.

தவிர நம்ம பந்தா பரமசிவம் புருனை சுல்தான் மாதிரியான ஆளுங்களும் இருக்கறவரைக்கும் ஒலகத்தில எங்கேயாவது இந்த மாதிரியான பசி, பட்டினி சம்பவங்க நடந்துகிட்டேதான் இருக்கும்னு தோணுது.