சுவாரஸ்யமான விஷயம்!

எனக்கு சுவாரஸ்யமாக பட்ட சில விஷயங்கள் இங்கே, உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்...

Saturday, March 26, 2005

 

டாக்டர்னா பெரிய பருப்பா நீ?

"இஞ்சினியரிங் காலேஜ் படிக்கும் போது சக மெடிக்கல் ஸ்டூடண்ட பாத்து, ஹே...பாடு! டாக்டர்னா பெரிய பருப்பா நீ? நானு மெஷின் ஸ்பேர் பார்ட்ட பத்தி படிக்கிறேன். நீ, மனுஷங்களைப் பத்தி" அப்டீன்னு உதார் உட்டது எவ்ளோ பெரிய தப்புன்னு இது மாதிரி செய்தி படிக்கும் போது சுரீர்-னு உறைக்கிது.

Image hosted by TinyPic.com

ரெட்டைத் தலையோட பிறந்த இந்த 10 மாச குழந்தையோட இரண்டாவது தலையை சமீபத்தில, பிரிச்சி எடுத்துருக்காங்க-ங்கற நியூஸ நீங்க கேள்விப்பட்டிருக்கலாம்.

கெய்ரோ-ல இருக்கிற குழந்தைகள் ஆஸ்பத்திரியில வெச்சி செஞ்ச, 13 மணி நேர ஆபரேஷனுக்கு பிறகு, இப்போ இக்குழந்தை நலமா இருக்கிறா.

ஆபரேஷன் செஞ்ச டாக்டர்ங்க சொல்றது என்னான்னா...மொத தலையை மூளை வரைக்கும் போய் பிரிக்கிற வரைக்கும், இரண்டாவது தலை சிரிச்சிகிட்டும், கண் இமைச்சிட்டும் இருந்திச்சாம்.

10 மாசமா தவழ்றதுக்கும், பாரமான தலைய வச்சிகிட்டும், கஷ்டப்பட்ட இந்த குட்டிப்பாப்பா இப்போ சந்தோஷமா இருக்குதாம்.

எப்படியாப்பட்ட மனுஷனையும் ஒரு நிமிஷம் மனசு நெகிழ்ச்சியாக்குது இந்த சம்பவம்.

இப்பம்லாம் டாக்டர்கள மரியாதையாவே பாக்கறேன்.

Friday, March 25, 2005

 

சுவாரஸ்யமான 112

GSM மொபைல் தொலைபேசிகளின் அவசரத் தேவைக்கான உலகலாவிய எண் 999 அல்ல. 112 தான் என்பது உங்களுக்கு தெரியுமா?

இந்த எண் 112 - ஐ நீங்கள் சிம் கார்ட் இல்லாமலும் டயல் செய்யலாம்.

மொபைல் நெட்வொர்க் இல்லாத இடங்களிலும் நீங்கள் 112 - ஐ டயல் செய்தால் அருகாமையில் இருக்கக் கூடிய உள்ள எந்த ஒரு இணைப்பையும் உடனே தொடர்பு கொண்டு அவசர தகவல் ஏற்படுத்திக் கொடுக்கும்.

சுவாரஸ்யமான இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்த எண் 112-ஐ உங்கள் மொபைல் போன் Key Pad Lock செய்யப்பட்டிருக்கும் நிலையில் கூட டயல் செய்ய முடியும் என்பதுதான். (சோதித்துப் பாருங்க!)

நீங்கள் இச்சேவையினை பயன் படுத்தப் போவதில்லை என்றாலும் அரிய இந்தத் தகவலை குறைந்தபட்சம் நாமறிந்தவர்களிடத்தில் பகிர்ந்து கொள்வோமே!

 

சுவாரஸ்யமான விஷயம்!

வலைப்பதிவு எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சிகிட்டாச்சி. இன்னிக்கு வாசகர்களை வரவழைக்க (தன்னோட "வலை"யில் விழ வைக்க?) அவங்க அவங்க ஆளுக்கொரு உத்தியைக் கையாள்றாங்க. அதில ஒண்ணு, மத்தவங்க வலைப்பதிவில பின்னூட்டம் கொடுக்குறேன் பேர்வழின்னு நைசா தன்னோட பிளாக் அட்ரஸ போட்டுட்டு ஓடியாந்துர்றது.

எனக்கு தெரிஞ்ச "சுவாரஸ்யமான" விஷயங்களைப் பதிவு செய்யலாம்னு உத்தேசம். புதுவருஷ தீர்மானம் மாதிரி "புஸ்" போவாம ஏதாச்சிம் செய்வேங்க.

Thursday, March 17, 2005

 

இது என் முதல் முயற்சி

இது என் முதல் முயற்சி என்பதால் கோணல் மாணலாகத்தான் இருக்கும். மன்ச்சிடுங்க!