சுவாரஸ்யமான விஷயம்!

எனக்கு சுவாரஸ்யமாக பட்ட சில விஷயங்கள் இங்கே, உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்...

Saturday, December 31, 2005

 

மில்லியன் டாலர் "புள்ளி"

வறுமை வந்தா வறட்சி வரும்தான். வறட்சி அலக்ஸ் டியூ என்கிற இந்த 21 வயது மாணவரின் வாழ்க்கையிலும் வந்தது. ஆனால் சிந்தனையில் இல்லை.

லண்டன்ல படிக்கற இவரு சமீபத்தில யுனிவர்ஸிட்டிக்கு கட்டறத்துக்கு காசு இல்லையேன்னு விரக்தி அடைஞ்சிட்டார். அதோட ஓய்ஞ்சி போயிடாமே, என்ன செய்யறதுன்னு யோசிச்சப்போ உதயமானதுதான் இந்த மில்லியன் டாலர் ஹோம் பேஜ் ஐடியா!



இதன் மூலமா நாலே மாசத்துல இளம் கோடீஸ்வரர்கள் லிஸ்டில் இவரும் சேர்ந்துட்டாரு. தன்னுடைய இணையதளத்தை புதுமையான முறையில் ஒரு விளம்பரப்பலகையாக மாத்தியிருக்காரு. இதில என்னங்க புதுமை இருக்குன்னு கேக்கறவங்க மட்டும் மேல படிங்க: இவருடைய இணையதளத்தின் முதல் பக்கத்த ஒரு மில்லியன் புள்ளிகளா (pixels) பிரிச்சி கூறு போட்டு ஒரு புள்ளிக்கு ஒரு டாலர்ன்னு வெல பேசி வித்துட்டாரு (பெரும்புள்ளிதான் போங்க!)

அதாவது தோராயமா 10x10 கட்ட அளவு புள்ளிகள் இடத்திற்கு இவர் நிர்ணயிச்சிருக்கிற வெலை 100 டாலர்.



முதல்ல இந்த ஐடியா ஒர்க் அவுட் ஆவலை. இவரோட அண்ணன் மற்றும் நண்பர்களுக்கு சில புள்ளிகளை பிரிச்சி கொடுத்தாரு. அதில வந்த ஆயிரம் டாலரை வெச்சி ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டாரு. மீடியான்றது எவ்ளோ பவர் ஃபுல்லான விஷயம்-னு சொல்லவா வேணும்? செய்தி பத்திரிகைகள் மற்றும் இணையங்கள் மூலமா நொடிப்பொழுதில் ஊர் பூரா சேதி பரவிடுச்சி.

நாலு மாசத்துக்கு முன்னாடி யுனிவர்ஸிட்டிக்கு காசு கட்ட முடியாம தவிச்ச இவருக்கு இப்போ வேலை கொடுக்க IT கம்பெனிகள் போட்டி போடுகின்றன.

எப்படிங்க இது சாத்தியமாச்சின்னு கேட்டா, "சிந்தனைக்கு சோர்வு கொடுக்காம யோசிச்சா எதையும் சாதிக்கலாங்க" என்கிறார் கூலாக.

நீ புள்ளி வெச்சா நான் கோலம் போடுவேன்-ங்கற அரதப்பழசான டயலாக், மேலே உள்ள இந்த சம்பவத்துக்கு ஏத்தாபோல இனி மாறும்னு தோணுது. ஒங்களுக்கு ஏதாச்சிம் தோணுதா?

Wednesday, December 21, 2005

 

வாங்கும் சம்பளத்தை உயர்த்துவது எப்படி?

அமெரிக்காவில வேலை செய்ற செகரட்டரி ஒர்த்தர்க்கு, தான் வாங்கிகிட்டு இருக்கிற சம்பளத்த, மேல உயர்த்திக் கேக்க ஆசை! மேனேஜர்கிட்ட போயி எப்படி கேக்கறதுன்னும் தெரியல... 'சோப்பு'லியோ, 'ஆயில்'லியோ அவருக்கு நம்பிக்கை இல்லாததால (நேரா போயி கேட்டா, கடுகடும்பானேன்னுட்டு) ஒரு ஐடியா செஞ்சார். இங்கிலீஷ்ல அடிச்ச அவரோட லெட்டர மாத்தாம ஒங்க பார்வையில வெச்சிட்டேன்:

Dear Bo$$,

In thi$ life, we all need $ome thing mo$t de$perately. I think you $hould be under$tanding of the need$ of u$ worker$ who have given $o much $upport including $weat and $ervice to your company.

I am $ure you will gue$$ what I mean and
re$pond $oon.

Your$
$
incerely,
Norman $oh
________________________

அடுத்த நாள் காலங்காத்தாலேயே மேனேஜர், பதிலும் அனுப்பிச்சிட்டாரு:

Dear NOrman,

I kNOw you have been working very hard. NOwadays, NOthing
much has changed. You must have NOticed
that our company is NOt doing NOticeably well as yet.

NOw the newspaper are saying the world`s leading ecoNOmists are NOt sure if the United States may go into aNOther recession. After the NOvember presidential elections things may turn bad.

I have NOthing more to add NOw. You kNOw what I mean.

Yours truly,
Manager
__________________

நீதி: கோக்குமாக்கா மேலிடத்துக்கு லெட்டர் போடறத்துக்கு முன்னாடி, ஒரு தடவ மோட்டுவளைய பாத்து சிந்திச்சி செயல்படுறது நல்லது.