Wednesday, January 25, 2006
ஒடுற பஸ்ஸில...

ஆனா,
ஒடுற பஸ்ஸில ஒரு கண்டக்டர் தூங்கறத்துக்கும், டிரைவர் தூங்கறத்துக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க பாப்பம்?
விடையை சொல்றப்ப, எப்பவும் பல்லை கடிக்கற மாதிரி இருக்கிற என் நண்பனோட கடி ஜோக் இந்த முறை கொஞ்சம் ரசிக்கும்படி இருந்ததால...
'சூப்பர்' தான் வேறுபாடு என்று தவறாகச் சொல்லக் கூடாது.
சரியான விடையை யாரும் எழுதாவிட்டால் ... நாளைக்குப் பார்க்கலாம்.
ஜட்டி போட்டுட்டு அதுக்கு மேலே ஃபேண்ட் போடுவதற்கும் -ஃபேண்ட் போட்டுட்டு அதற்கு மேல் ஜட்டி போடுவதும்தான் வித்தியாசம்.
பதிவுக்குள்ளே பின்னூட்டங்கள் போடறதைத்தான் நான் பாத்திருக்கேன். நீங்க பின்னூட்டத்துக்குள்ளே புதுசா ஒரு பதிவைத் தொடங்கியிருக்கீங்க போல?
அன்பு சர்தார்,
ட்ரைவர் தூங்குவதற்கும் கண்டக்டர் தூங்குவதற்கும் என்ன வேறுபாடு?ன்னு கேட்டீங்களா ... எனக்கு இந்த:) வேறுபாடுதான் உடனே நினைவுக்கு வந்தது - மன்னிக்கவும்.
ஆனா என் கேள்விக்கு பதில் எங்கே மேன்?
அட்றா சக்கை, இப்படி கழண்டுட்டா எப்டி? தூங்கி "வழியாம" பதில சொல்லுமய்யா :)
ஓட்டுநர் தூங்கினா எல்லோருக்கும் டிக்கட் கிடைக்கும்.
டிக்கட் தான் வித்தியாசமே! நம்பாதவங்க இங்கே போயி பாத்துகுங்க! (டிரைவர் இன்னும் தூக்கத்திலேயிருந்து எழலை போலிருக்கு)
நெஜமாலுமா? அல்லது சர்க்கஸ் காட்டுகிறார்களா?
"ஒண்ணுமே புரியலியே, இந்த ஒலகத்திலே!"
அன்புடன்
இறைநேசன்
உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி!
இறைநேசன்,
இது சர்க்கஸ் அல்ல! நிஜ சம்பவத்தை எதேச்சையாக எடுத்த புகைப்படம் என்கிறார்கள்.
இந்த போட்டோவைப்பார்த்த பிறகு செய்த பஸ் பயணங்களில் டிரைவர் தூங்கறாரா என்று பார்த்துப்பார்த்து நானும் தூங்குவதில்லை.
விபத்துக்களை சென்டிமென்ட்டாக குறைப்பதற்காக, பிரிட்டனின் பேருந்துகளில் பஸ் டிரைவரின் கண்ணில் படுவதுமாதிரி அவரது குடும்ப உறுப்பினர்களின் போட்டோக்களை வைத்திருப்பார்களாமே ஒங்களுக்கு தெரியுமா?
<< Home