சுவாரஸ்யமான விஷயம்!

எனக்கு சுவாரஸ்யமாக பட்ட சில விஷயங்கள் இங்கே, உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்...

Thursday, June 30, 2005

 

கழுத்தறுக்கிற சமாச்சாரம்!

முக்கியமான நேரத்துல கழுத்தறுக்கிற சமாச்சாரங்கள்-ல முதல்ல நிக்கிறது, மொபைல் போனில சார்ஜ் அவுட்டாகிறது. அதுவும் சரியான நேரத்தில பீப்..பீப் -ந்னு பல் இளிக்கும்.

நோக்கியா வெச்சிருக்கறவங்கள தவிர மத்தவங்களுக்கு ஒரு பெரிய "ஸாரி"... ஏன்னா இந்த நியுமராலஜி(?) மேட்டர் மத்த போன்ல வேலைக்காவாது.

மந்திரம் இதான்:

பரிதாபமா இறுதி கட்ட டோன் வாக்குமூலம் கொடுக்கற ஒங்க மொபைல்-ல *3370# நம்பரை நச்சுன்னு போட்டுத்தாக்குங்க. ஒரு முறை ரீ- ஸ்டார்ட் ஆகிற போனில 50% புது சார்ஜ் நீங்க பாக்கலாம். (அதயும் காலி பண்ணிட்டு வந்து நிக்காதீங்க...)

போனில ரிஸர்வ் ஆகியிருக்குற ஒரு பேக்கப்- சமாச்சாரம், மறுபடி நீங்க சார்ஜ் செய்றப்போ ரிஸர்வ் செஞ்சி வச்சிக்கும்.

Nalla yosanainganna...அதெல்லாம் சர்த்தான்...இதுமாதிரி வசதி, மேனேஜரு எதுனா கேள்வி கேட்டு பேஜாரு செய்றப்போ நம்ம மேல்மாடி (அதாங்க கபாலம்) அய்ட்டங்கள ரீ- கால் செய்ற மாதிரி எதுனா இருந்தா சொல்லுங்க...

கருத்துக்கள்:
நோக்கியாவைப்பற்றி இந்த அளவு விஷயங்கள் சொல்றதைப்பார்த்தால்... நீங்கல் நோக்கியா ஏஜண்ட்டா?
 
அனானிமஸ் அன்பரே... கருத்து பதிந்தமைக்கு நன்றி.

போலிகளும், பேடிகளும் நடமாடும் பின்னூட்டத்தில், சாதி மத துவேஷங்களும், காழ்ப்புணர்ச்சியும் இல்லாத கருத்துக்களைப் பார்த்தால் சந்தோஷம் தான் வருகிறது.

எனக்கு பிடித்த, நான் ரசித்த அன்றாட விஷயங்களை பிறருடன் பகிர்ந்து கொள்ள வெளியிட எண்ணியதால் தான் இவ்வலைப்பதிவை துவங்கினேன். அதில் நான் பயனடைந்த ஒன்றுதான் இந்த லோ-பேட்டரி ரீ- சார்ஜ் மேட்டர். எனவே நான் நோக்கியா ஏஜன்ட் இல்லை.

போன் தவிர்த்து, நிறைவைத் தரும் நிறைய விஷயங்களை எழுதும் எண்ணம் இருக்கிறது.
 
//ஒரு முறை ரீ- ஸ்டார்ட் ஆகிற போனில 50% புது சார்ஜ் நீங்க பாக்கலாம்.//

சர்தார், இப்படி பண்ண வாய்ஸ் குவாலிட்டி எப்படியிருக்குன்னு கேட்டீங்களா?
 
ஆபத்துக்குப் பாவமில்லேங்கற பாட்டி கத தான் விஜய். அட்லீஸ்ட் வாய்ஸ் குவாலிட்டிக்கு பயந்தாவது கரக்டா சார்ஜ் பண்ணிக்குவோமில்ல?...

அத வுடுங்க விஜய்... ஆனாலும் பின்னூட்ட வில்லனை நீங்க இந்த அளவுக்கு பயமுறுத்தியிருக்கக் கூடாது.

டெக்னிக்கல் சமாச்சாரங்களை திறந்து வெச்சிகிட்டு, கபடி விளையாட்டு ரேஞ்சுக்கு ஆள முன்னே வர சொல்லச் சொல்ல, ஆசாமியோ பின்வாங்கிவிட்டார்.
 
refinance
 
Post a Comment



<< Home