Wednesday, March 28, 2007
ஊஹூம்!

உரிமைகளை கேட்டுப் பெறும் வழிகளையும், விட்டுக் கொடுக்காமல் போராடும் குணத்தையும் பெற வலிமை பெற்றவர்களாகத்தான் இருக்க வேண்டுமா என்ன?
சீனாவின் பெய்ஜிங்கில் தனது உரிமையை விட்டுக் கொடுக்காமல் தன்னந்தனியே போராடுகிறார் ஒரு துணிச்சலான பெண்.
தென்மேற்கு சைனாவில் அமைந்துள்ள சான்கிங் புறநகர் பகுதியிலுள்ள பழைய கட்டிடங்களை இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டு, புதிய கட்டிடங்களை அமைக்கும் நிறுவனம் ஒன்றுடன் மல்லு கட்டுகிறார் 47 வயதான "வு பிங்" என்ற பெண்மணி.
இவர் வீட்டைச் சுற்றியுள்ள மற்ற 280 பழைய கட்டிட சொந்தக்காரர்களும் நிறுவனத்திடமிருந்து நஷ்டஈட்டைப் பெற்றுக் கொண்டு இடத்தை காலி செய்துவிட்ட சூழலிலும் தனக்குப் பிரியமான வீட்டை இடிக்க மனம் வராமல் நஷ்டஈட்டை திருப்பியனுப்பிவிட்டார் இவர்.
நிறுவன உரிமையாளர்கள் இவரிடம் இயன்றவரையில் கேட்டுப் பார்த்துவிட்டும் "ஊஹூம்" கூறிவிட்ட காரணத்தால் வேறு வழியின்றி இவர் வீட்டை மட்டும் விட்டுவிட்டு மற்ற இடங்களில் வீடு கட்டும் பணி துவங்கிவிட்டனர்.
சைனாவின் ரியல் எஸ்டேட் வியாபாரிகள் அரசாங்க அதிகாரிகளைக் கையில் போட்டுக்கொண்டு நிலங்களை ஆக்கிரமிப்பது புதிய ஒன்றில்லை என்றாலும் "வு பிங்" போன்ற பெண்மணியின் போராட்டத்தினாலும் அதன் மூலம் எழுந்திருக்கும் எழுச்சி அலைகளினாலும், ஆக்கிரமிப்புக்கான புதிய சட்ட திட்டங்களை அரசாங்கமே வகுக்கும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.
வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுமையாக தோண்டப்பட்டு விட்டதால் தனித்தீவு போன்று காட்சியளிக்கும் தன் சொந்த வீட்டினுள் பிரவேசிக்க இயலாத சூழலில் சிரமப்பட்டு வாழ்ந்து வருவதாக கூறும் இப்பெண்மணியின் துணிச்சலும், போராடும் மனப்பான்மையும் சைனாவின் இன்றைய தலைப்புச் செய்தியாக அனைத்து ஊடகங்களிலும் பிரதானமாகப் பேசப்பட்டு வருவதில் வியப்பில்லை.
Labels: உரிமை, துணிச்சல், போராட்டம்
உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பதிவிடுங்கள்
http://sivabalanblog.blogspot.com/2007/03/weird.html
அதோடு அழைப்பிற்கும் மிக்க நன்றி!
சமயம் கிடைக்கையில் கண்டிப்பாக வந்து உங்களோடு என் மன எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறேன்.
எனக்கு இது மிகவும் வருத்தமான செய்தி! வீடு இடிபட்டதற்கல்ல, அப்பெண்மணியின் வீரம் ஜெயிக்காமல் போனதற்கு...
வீட்டினுள் பிரவேசிக்க இயலாத அளவிற்கு தடைகளையும் மன உளைச்சல்களையும் ஏற்படுத்திய ரியல் எஸ்டேட் நிறுவனம் இறுதியில் தான் நினைத்ததை சாதித்துவிட்டது.
(எங்கோ, யாருக்கோ இது பொறுந்துவது போல் இல்லை?)
<< Home