சுவாரஸ்யமான விஷயம்!

எனக்கு சுவாரஸ்யமாக பட்ட சில விஷயங்கள் இங்கே, உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்...

Wednesday, September 21, 2005

 

இலவசமா ஒரு இரத்த அழுத்தப்பரிசோதனை - செய்யலாமா?

யாருக்கா... அட ஒங்களுக்குத்தாங்க!

மொதல்ல இங்க இருக்கிற படங்கள அசையாம ஒரு நிமிஷம் பாருங்க. (இது அனிமேஷன் வித்தை ஏதும் செய்யப்படாத சுத்த அக்மார்க் படங்கள்)

இது நகர்ற மாதிரி ஒங்களுக்கு தோணிச்சின்னா, மன்னிச்சிக்குங்க.. ஒங்களுக்கு BP இருக்குங்குறது உறுதியாய்டிச்சி. அது மட்டுமில்லே... வேக வேகமா நகர்ற மாதிரி தோணிச்சின்னா ஒங்களுக்கு உயர் ரத்த அழுத்தமும் இருக்கலாம்.










சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில, அதிகமான சிறு வயதுடையவர்களும், அதிக வயதானவர்களும் இது அசையாத படங்கள்தான்னு உறுதி செஞ்சிருக்காங்க.

அடிக்கடி இந்தப்படங்களைப் பார்த்து ஒங்க இரத்த அழுத்த நிலையை நீங்களே தெரிஞ்சிக்கோங்க.

ஆனா, வேகமா நகர்ற படத்தப்பார்த்து அதன் மூலமா ஒங்களுக்கு இரத்த அழுத்தம் எகிறிட்டா அதுக்கு நான் பொறுப்பில்லீங்...

______________

பின்குறிப்பு: படிச்ச கையோட மறக்காம பின்னூட்டத்தில் இருக்குற என்னோட முதல் கமெண்ட்டையும் படிச்சிட்டு போங்க.

Saturday, September 03, 2005

 

20 நிமிஷத்தில 24 லட்சம் சம்பாதிப்பது எப்படி?

கீழே இருக்குற கணக்கு சரியான்னு பார்த்து சொல்லுங்க:

6 X 100 X 10 X 20 X 20 = 2400000

20 நிமிஷத்தில மேலே சொன்ன 24 லட்சம் சம்பாதிப்பது எப்படி யாருச்சும் சொல்லுங்க பாப்பம்?

க்ளூ இல்லாம இல்ல! அதாங்க KBC-2!

எப்படின்னு தெரியுதா? "கோன் பனேகா குரோர்பதி" கேள்விகளை SMS மூலம் பதில் அளிக்க வேண்டுகிறார்கள் இந்நிறுவனத்தினர். ஹா! பிசாத்து SMS தானே என்று நினைக்கத் தோணுகிறதா? எனில் நீங்களும் இந்த விளையாட்டில் ஒரு ஆடுதான்! Sab ko bakra bana raha hai :-)


Koun Banega Bakra



6(ரூபாய்/SMS) X 100(என்ட்ரீக்கள்) X 10( நகரங்கள்) X 20 (மாவட்டங்கள்) X 20(மாநிலங்கள்) = 6 X 400000 (2 லட்சம் ரூபாய் பணமுடிப்பைப் பெற முயற்சி செய்யும் மக்கள்)

ஒரு வேளை 100 நகரத்தில இருந்து 1000 என்ட்ரீக்கள் வந்தாக்கா என்ன ஆவும்னு நெனச்சிப்பாருங்க??

அதிகமா ஒண்ணுமில்லீங்க ஜென்டில்மேன். இதன் மதிப்பு இன்னும் 2 பூஜ்யங்கள் கூடி 24 கோடியில வந்து நிக்கும்! ஆனா அதான் உண்மை!

இத்தோட நிக்கிற சமாச்சாரமில்லே இது! 100 நகரத்தில இருந்து 1000 என்ட்ரீக்கள்-ங்கறது தம்மாத்தூண்டு ஸாம்பிள் தான். யதார்த்தம் என்னான்னா இது இன்னுமொரு 100 மடங்கு இல்லே உச்ச மதிப்பா 1000 மடங்கா ஆவறத்துக்கு ஏராளமான வாய்ப்பு இருக்கு.

அந்த பட்சத்தில ஒவ்வொரு எபிசோட்-லேயும் 20 X 100 கோடி சம்பாத்தியம் கெடைக்கும் (வெறும் 20 நிமிஷத்தில)

ஆனா கொடுக்கற பரிசு எம்மாவாம்? ரெண்டு கோடி!..கெக்கே-பிக்கே ;-) அதுவும் யார் பாக்கெட்லே இருந்து?

நிகழ்ச்சிய நடத்துற என் கண்ணு புத்திசாலி சித்தார்த்தா பாசு! என் கண்ணே பட்டுடும் போலிருக்கு ஒங்க தெறமய நினைச்சி! நம்ம மக்களோட மன நிலைய நம்மூர் அரசியல்வாதிங்கள விட தெளிவா புரிஞ்சிகிட்டது நீங்க தான்!

இவ்ளோ அள்ளலும் வெறும் SMS மூலமாத்தான்னு சொன்னா நம்புவீங்களா? வேற வழியில்ல! நம்பித்தான் ஆகணும்.

அப்போ விளம்பரத்தினால வர்ற காசு?...க்கா...மக்கா!

அய்யா! இதல்லாம் போதும். KBC யோட வருஷ நிகர லாபம் என்னன்னு மட்டும் சொல்லுங்கன்னு படுத்தறவங்களுக்கு மட்டும்:

2400 X (5 X 4) (அத்தியாயங்கள்/மாதம்) X 12 = 576000 கோடி

அட ஒரு கணக்குக்கு 50% வருமானத்தை வருமான வரி, லொட்டு லொசுக்கு கட்றத்துக்கு (ஒவ்வொரு அத்தியாத்துக்கு கொடுக்கற 2 கோடி பரிசு உள்பட) கழிச்சாக்கூட, பாக்கி பாக்கெட்-ல மிஞ்சறது 2,88,000 கோடி லாபம் (வெறும் SMS மூலமா)