Saturday, December 31, 2005
மில்லியன் டாலர் "புள்ளி"
லண்டன்ல படிக்கற இவரு சமீபத்தில யுனிவர்ஸிட்டிக்கு கட்டறத்துக்கு காசு இல்லையேன்னு விரக்தி அடைஞ்சிட்டார். அதோட ஓய்ஞ்சி போயிடாமே, என்ன செய்யறதுன்னு யோசிச்சப்போ உதயமானதுதான் இந்த மில்லியன் டாலர் ஹோம் பேஜ் ஐடியா!
இதன் மூலமா நாலே மாசத்துல இளம் கோடீஸ்வரர்கள் லிஸ்டில் இவரும் சேர்ந்துட்டாரு. தன்னுடைய இணையதளத்தை புதுமையான முறையில் ஒரு விளம்பரப்பலகையாக மாத்தியிருக்காரு. இதில என்னங்க புதுமை இருக்குன்னு கேக்கறவங்க மட்டும் மேல படிங்க: இவருடைய இணையதளத்தின் முதல் பக்கத்த ஒரு மில்லியன் புள்ளிகளா (pixels) பிரிச்சி கூறு போட்டு ஒரு புள்ளிக்கு ஒரு டாலர்ன்னு வெல பேசி வித்துட்டாரு (பெரும்புள்ளிதான் போங்க!)
அதாவது தோராயமா 10x10 கட்ட அளவு புள்ளிகள் இடத்திற்கு இவர் நிர்ணயிச்சிருக்கிற வெலை 100 டாலர்.
முதல்ல இந்த ஐடியா ஒர்க் அவுட் ஆவலை. இவரோட அண்ணன் மற்றும் நண்பர்களுக்கு சில புள்ளிகளை பிரிச்சி கொடுத்தாரு. அதில வந்த ஆயிரம் டாலரை வெச்சி ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டாரு. மீடியான்றது எவ்ளோ பவர் ஃபுல்லான விஷயம்-னு சொல்லவா வேணும்? செய்தி பத்திரிகைகள் மற்றும் இணையங்கள் மூலமா நொடிப்பொழுதில் ஊர் பூரா சேதி பரவிடுச்சி.
நாலு மாசத்துக்கு முன்னாடி யுனிவர்ஸிட்டிக்கு காசு கட்ட முடியாம தவிச்ச இவருக்கு இப்போ வேலை கொடுக்க IT கம்பெனிகள் போட்டி போடுகின்றன.
எப்படிங்க இது சாத்தியமாச்சின்னு கேட்டா, "சிந்தனைக்கு சோர்வு கொடுக்காம யோசிச்சா எதையும் சாதிக்கலாங்க" என்கிறார் கூலாக.
நீ புள்ளி வெச்சா நான் கோலம் போடுவேன்-ங்கற அரதப்பழசான டயலாக், மேலே உள்ள இந்த சம்பவத்துக்கு ஏத்தாபோல இனி மாறும்னு தோணுது. ஒங்களுக்கு ஏதாச்சிம் தோணுதா?
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி! க்ரீன் கார்டு இல்லாததால்தான் என் வாழ்க்கையில் இன்னம் க்ரீன் ஸிக்னல் விழவில்லை என்ற சப்பைக்கட்டோடு வருடக்கணக்கில் இந்தியாவில் வேலைக்காக உட்கார்ந்து இருக்கும் நம் இளைஞர்கள் மத்தியில், இச்செய்தி புதுமையாக தோன்றியதால் இப்பதிவு.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்கிற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.. காசு சம்பாதிக்க இப்படி எல்லாம் வழி உண்டு என்று காட்டிய அந்த ஆள் வாழ்க. அதனை உங்கள் பதிவில் ஓர் இடுகையாக இட்ட நீங்களும் வாழ்க..
<< Home